அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை (12) கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காலியின் பல பிரதான வீதிகள் உட்பட உள் வீதிகள் நீரில் மூழ்கிய காட்சிகள் வௌியாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் போக்குவரத்துக்கு பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.