வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. கடந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பணம் 475 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.