காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஆப்கான் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் குழப்பநிலைக்கு மத்தியில் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காணப்பட்ட கர்ப்பிணியொருவர் குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள ரம்ஸ்டெய்ன் விமானதளத்தை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தவேளை அந்த பெண்மணி குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் விமானத்திற்குள் சென்ற மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் பயணித்துக்கொண்டிருந்தவேளை அந்த பெண் வலியால் துடித்தார்,விமானத்தில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக விமானத்தை விமானி கீழே இறக்கவேண்டியிருந்தது இது தாயின் உடல்நிலையை பாதுகாப்பதற்கு உதவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

