துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரையில் 600க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலைவரையில் கிடைத்த தகவல்களுக்கு அமைய இலங்கையர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பல்வேறு அண்டை நாடுகளில் ஊணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.