Date:

சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு பெரிய பள்ளிவாசலில் (photos)

75வது சுதந்திர தினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (4) காலை இடம் பெற்றது.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வை இன்று காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

 

திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி ஸப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் உலமாக்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விசேட துஆ பிரார்த்தனைககளும் இடம் பெற்றன.

படங்கள் – கொழும்பு நிருபர் முஹம்மட் நஸார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...