இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதனால் கொழும்பு வரும் நபர்கள் தனது செயற்பாடுகளை சரிவர நிறைவேற்றி கொள்ளுமாறு தெரிவிக்கப்படிகின்றது.
குறிப்பாக சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் பதற்றமான சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படிகின்றது.