ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு...