ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல்...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற...

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத்...