Date:

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணத்தைச் செலுத்தாத நுகர்வோர்களின் நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை செலுத்தாமை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எட்டு மில்லியன் ரூபா வரையில் செலுத்தப்படாத பட்டியல்கள் நான்காயிரம் மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் ஆறு மில்லியன் ரூபா பணம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 நாட்களுக்கும் மேலாக பில் செலுத்தாத அனைத்து குடிநீர் நுகர்வோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 08 இலட்சம் மக்கள் 03 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏகநாயக்க வீரசிங்க மேலும் தெரிவித்தார்.x

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...