Date:

FIFA World Cup final 2022: அர்ஜென்டினா இரண்டு கோல்களுடன் முன்னிலை

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடுகின்றது.

இந்த போட்டில் தற்போது 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா  முன்னிலையில் உள்ளது.

22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20 தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்துள்ளன.

64வது போட்டியான இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அடைந்த தோல்விக்கு பின், அர்ஜென்டினா அணி பெரும் எழுச்சி கண்டது.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களிடையே அதிகளவில் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.

கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் மெஸ்சி எத்தனை விருதுகள், பட்டங்கள், சாதனைகள் படைத்திருந்தாலும், உலகக்கோப்பையை இதுவரை பார்த்ததில்லை. அதனால் இது மெஸ்சியின் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்கள்.

அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...