பேலியகொடை, கறுப்புப் பாலம் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் 119 தகவல் வழங்கும் இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து பேலியகொடை பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட விசாரணையின் போதே இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.