இன்று உலக எய்ட்ஸ் தினம் (01) அனுசரிக்கப்படுகிறது.
“சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் பிரச்சாரத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ஜனக வேரகொட தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் (acquired immunodeficiency syndrome) உலகில் முதன்முறையாக 1981 ஆம் ஆண்டு புதிதாக உருவாகியுள்ள உயிர்கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்பு முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் உள்ள பாலியல் தொழிலில் ஈடுப்பட கூடிய பெண் ஒருவருக்கு 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக இது கண்டறியப்பட்டது. இந்த 40 ஆண்டுகளில் எய்ட்ஸ் ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி (ART) மூலமாக சமாளிக்க கூடிய மற்றும் மருந்துகள் மூலம் இயல்பு வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாக வளர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 41 ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை வளர்ச்சியின் உதவியோடு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு 50 வயதுக்கு மேல் வாழும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு எய்ட்ஸ் பாதிக்கும் விகிதமும் 17 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.