குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை சமாளிக்க இலங்கைக்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இதனால் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தாமல் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கி, இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இதுவரை அறிவிக்கவில்லை.