Date:

பசில் ராஜபக்சவுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது : காரணம் இதோ

ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்திருந்தாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பாக பேசிய இராஜாங்க அமைச்சர், எந்தவொரு தனிநபருக்கும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து SIS தீர்மானிக்கிறது என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாமன்ற உறுப்பினர் இல்லாத போது அவருக்கும் இதற்கு முன்னரும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது, இது SIS எடுத்த தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும் என்றார்.

பசில் ராஜபக்சவின் குடும்ப உறவுகள் மற்றும் அவருக்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அவர் இலங்கை வந்ததைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்ததாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார்...

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco...

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி...

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...