இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86வது பிறந்தநாள் விழாவில் நேற்று (23) கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களாகிய நாம் எமது சொந்த முயற்சியுடன் எழுந்து நிற்க வேண்டும். அதற்குத் தேவையான வேலைத்திட்டம் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.