எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்னறி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் கிண்ணியா – முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.