இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் பலவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நாளைய போராட்டங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு தூதுவர் ஜூலி சுங் இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளார்.“வன்முறை தீர்வல்ல” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியாக போராட்டம் நடத்து மக்களுக்கு இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ள அவர் குழப்பமும் வன்முறையும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது எனவும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.