Date:

எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கோரிக்கை

எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரியுள்ளார்.

நேற்று முன்தினம் கோப் குழுவில் முன்னிலையான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபாவை விட குறைவான விலையில் நாட்டில் விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் பதிவொன்றில் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், தம்மையும் கோப் குழுவிற்கு அழைக்குமாறும் கோரியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரோ அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனமோ, கோப் குழுவையும், பொதுமக்களையும் தவறாக வழிநடத்தியிருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...