கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தனர்.
இந்நிலையில், 667 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.