ருமேஷின் விளையாட்டு உபகரணங்கள் சேதம்: துருக்கி எயார்லைன்ஸ் பகிரங்க வருத்தம்!

உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லைன்ஸ் (Turkish Airlines) நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் நிறுவனத்திற்குள் முறையான உள்நாட்டு விசாரணையை நடத்தி, விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய துருக்கி எயார்லைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

 

அத்துடன், பாதிக்கப்பட்ட வீரருக்கு விரைவாக உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அதன் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

 

சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெருமையை உயர்த்திய விளையாட்டு வீரரின் உபகரணங்கள் சேதமடைந்த விவகாரத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நேரடியாகக் கவனம் செலுத்தியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஆசிய விளையாட்டு போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.   இன்று (18) இடம்பெற்ற...

2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...