Date:

சிறுமி ஹிஷாலினி விவகாரம்: புவக்பிட்டிய அதிபரிடமும் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில், பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயதான சிறுமி கல்விக்கற்றதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபர், பிரதியதிபர் ஆகியோரிடமும் விசாரணைக​ள் மு​ன்னெடுக்கப்பட்டுள்ளன.

“அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் சிரேஷ்ட் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த சிறுமி விவகாரம் தொடர்பில் அந்த வீட்டிலிருந்த மற்றுமொரு நபரும் நேற்று (20) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருடைய கையடக்க தொலைபேசி, பொரளை பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலியவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது...

இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...