முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார்.

 

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.   இதன் காரணமாகச்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவிக்கு 16 தங்கப் பதக்கங்கள்!

கொழும்புப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவி டாக்டர் ஹாசினி, தனது சிறந்த கல்விச் சாதனைகளுக்காக கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட...