ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB வாக்குமூலம்

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை ஷிரான் பாசிக் கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.   இதன் காரணமாகச்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவிக்கு 16 தங்கப் பதக்கங்கள்!

கொழும்புப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவி டாக்டர் ஹாசினி, தனது சிறந்த கல்விச் சாதனைகளுக்காக கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட...