நீதிமன்றில் சாட்சியமளித்து வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் நேற்று (9) பதிவான நிலையில், காயமடைந்த 31 வயதுடைய இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணை நடைபெற்றிருந்தது.

 

அந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

 

பின்னர் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர, அவர் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே, அவரை வழிமறித்து இனந்தெரியாதோரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பண்டாரவளை முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி...

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று...