பண்டாரவளை முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர் நீதிமன்றம் அதிரடி!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தேஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியற்றது...