அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம், அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகள்...

குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது...