ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறுகிறது.
இதன்போது எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பிலும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அதேவேளை, இவ்வருடம் நடைபெறும் முதலாவது கலந்துரையாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.