கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள 37,500 மெட்ரிக் டன் டீசல் உடனான கப்பலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நேற்றிரவு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய தினம் குறித்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்க முடியும் என வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.