மருதானை பொலிஸ் குடியிருப்பு பகுதியில் 9ஆவது மாடியில் இருந்து மயங்கி விழுந்து 67 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கூலி வேலை செய்து வந்துள்ளதுடன், மரணிக்கும் போது 67 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.