நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த வருடமே திருமணம் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரக்கொண்டா உடன் அவர் காதலில் இருப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தான் திருமணம் என சொல்லப்படுகிறது.
அது பற்றி டோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் அது பற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
அவர்கள் திருமணம் பற்றி தற்போது பரவும் தகவல் உண்மையா அல்லது வழக்கம் போல வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் லைகர் படம் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.