பல்வேறு நாடுகளில் காணப்படும் சட்டங்களுக்கு அமைவாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியின் பின்னர் மற்றுமொரு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை நபரொருவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுதொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உலகம் முழுவதும் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் பரவல் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மரியா வேன் கர்கோச் கருத்து தெரிவிக்கையில், ஒமைக்ரொன் திரிவு டெல்டாவைப் போல கடுமையானது அல்ல என்றாலும் அதை புறக்கணிக்க முடியாது என குறிப்பிட்டார்.
விசேடமாக BA 2 எனப்படும் ஒமைக்ரொன் திரிபானது அதிக பரிமாற்றத் திறனைக் கொண்டுள்ளது.
மேலும் இது BA திரிபைக் காட்டிலும் நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய மேலும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது உலகளவில் பதிவாகியுள்ள ஒவ்வொரு ஐந்து கொரோனா வைரஸ்களிலும் ஒன்று ஒமைக்ரொன் வகையின் BA இன் இரண்டு பிறழ்வுகளால் ஏற்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.