நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருந்து ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சமூகத்தில் தற்பொழுது பெரும்பாலான நோயாளர்கள் நோய் அறிகுறிகள் தென்படாதவர்களாகவே அடையாளம் காணப்படுகின்றனர்.
அவர்கள் மூலமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
ஆகையால் இயலுமான வரை விரைந்து தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி வேலைத்திட்டத்தை ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் நிறைவு செய்வதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்றாலும், சுகாதார பிரிவுகளில் இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சமூகத்தில் காணப்படும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகிய நோய்கள் குறித்து அச்சம் ஏற்படுமாயின், அவைதொடர்பாக உடனடியாக பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும்.
அதனை அலட்சியப்படுத்தி, சுகாதார பழக்கவழக்கங்களை கைவிடக்கூடாது என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.