வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

‘நாடே ஒன்றாக’தேசிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் இந்தச் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் பேரில் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் மேலும் வெளிப்படுத்தினார்.

இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதன் முதற்கட்டமாக, அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்?

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய...

91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (13)...