வினாப்பத்திர நெருக்கடி தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை கல்வி எதிர்காலத்திற்கு முக்கியமான ஒரு பரீட்சையாக கருதப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் மூலம் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக கல்வி அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கடமைகளுக்காக பங்குபற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

 

இதன் அடிப்படையில் கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரிட்சையில் கடமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அவர்களது பொறுப்பு மற்றும் தற்போதைய செலவுகளை கருத்தில் கொண்டு போதுமான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொல்பொருள்

4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘ஆர்டி’ (Ardi) எனும் பெண் எலும்புக்கூடு, பழங்கால மனிதர்கள் மரங்களில் ஏறும் நிலையிலிருந்து தரைப்பகுதியில் இரு கால்களால்...

சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்

ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில்...