கொழும்பு பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமில்லை!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத் தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30) வெளியிட்டுள்ளது.

 

இதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஆண்டுக்கு ஆண்டு (Point-to-Point) அடிப்படையிலான முதன்மை பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.0 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்திலும் எந்தவித மாற்றமுமின்றி 8 சதவீதமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.

 

இருப்பினும், உணவுப் பிரிவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 8.7 சதவீதமாகச் சற்று அதிகரித்துள்ளது.

 

அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 7.7 சதவீதம் என்ற அளவிலேயே செப்டம்பர் மாதத்திலும் மாற்றம் இன்றிப் பதிவாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...