தொழிற்சங்கங்களை அடக்குவதற்கும், வேலை நிறுத்தங்களை தடுக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான பொதுக் கூட்டமொன்று இன்று (30) கெக்கிராவ நகரில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ,
நாட்டின் வளங்களை நடு இரவில் விற்கும் அரசாங்கம்,தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் பக்கமே நிற்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.