முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக நியமித்ததையடுத்து சில பௌத்த தேசியவாதிகள் உட்பட இலங்கையில் உள்ள ஒரே அரசியல் நோக்குடைய பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விடயம் குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனது கருத்தை இவ்வாறு முன்வைத்தார்.
சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு இல்லாமல் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் சட்டம் முறையானதாக இருக்க வேண்டும் மாறாக புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் பின்னரே நாட்டில் சட்டமீறல் அதிகரித்து வருகின்றது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சந்தேகமும் எழுகின்றது.
அனைத்து தேசிய இனத்தவர்களையும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எந்தவொரு பாகுபாடுமின்றி பார்க்கின்றதா? ஏற்கனவே நாட்டில் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது புதிதாக கொண்டுவரப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற இந்த சட்டத்தின் கீழ் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுவதைக் காண்கிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்களால் எந்தவிதமான நீதியும் கிடைக்காது என்பதை எவராலும் தெரிந்து கொள்ள முடியும். வர்த்தமானிகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை அவர்களால் முறையாக செயல்படுத்த முடியுமா.ஒரு நாடு ஒரு சட்டம் என்று அவர்கள் கூறினாலும் பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் இஸ்லாமிர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் நன்மை செய்வதையோ நீதி வழங்கப்படுவதையோ நாங்கள் காணவில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.