இன்று மாலை 6 மணியளவில் காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த உத்தரதேவி கடவையை கடந்த மாணவன் மீது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே குறித்த மாணவன் மோதுண்டுள்ளார்.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் எனும் 18 வயதுடைய மாணவனே இதில் பலியாகியுள்ளார்.