கடந்த 21ம் திகதி கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்தமையும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்திஸ்தராக கடமை புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.