இந்த காலப்பகுதிக்குள் சுமார் 50,000 வாகனங்கள் குறித்த பகுதி ஊடாக பயணித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி திறக்கப்பட்ட நாள் முதல் மறுநாள் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், அதற்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு பணம் அறவிடப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (15) மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் இலவசமாக பயணிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (16) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை (17) நள்ளிரவு வரை 23,039 வாகனங்கள் பயணித்துள்ளன.
இந்த மூன்று நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் 17ஆம் திகதியன்றே பயணித்துள்ளன.
அன்றைய தினம் 48 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
