பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.
இதில் ராஜு அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றார், அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
அவரை தொடர்ந்து பிரியங்கா இரண்டாவது இடத்தை, பாவ்னி ரெட்டி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த சில நாட்களிலே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார் பாவ்னி ரெட்டி.
ஆம், தற்போது அவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.