ஐ.சி.சி இன் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் அணியின் அணித்தலைவராக பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் பாபர் அசாம் பெயரிடப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு ஆண்டுகளிலும் கிரிக்கெட் விளையாட்டில் அதன் அந்தஸ்து கொண்ட அணிகளில் மிகச் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்து அணிகளின் வீரர்களையும் உள்ளடக்கி ஒரு அணித்தலைவருடன் வருடத்திற்கான சிறந்த அணி எனும் பெயரில் ஒரு அணியை உருவாக்கி வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.