தலவாக்கலை வட்டகொட தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் இலங்கை மின்சார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை ஒஸ்போன் தோட்டத்தில் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இருபது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டுத் திட்டத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் உயர் அழுத்த மின்கம்பிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுள்ளதாகவும்
மின்சாரம் பெற பயன்படுத்தப்பட்ட பல மின் கேபிள்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.