மாவனெல்லை பிரதேச சபையில் தவிசாளர் எச்.பி.சந்தன குமார ஜயவந்தல பாதீடு நிறைவேற்றப்படாமையினால் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என அறிவித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.பிரதேச சபை சரத்துக்களுக்கு அமைய தமக்கு வழங்கப்பட்டு அதிகாரங்களின் கீழ் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாதீடு தோல்வியடைந்த மையினால் பலாங்கொடை நகர சபையின் தலைவர் சமிக ஜயமினி விமலசேன அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என அறிவித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.