அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க சஜித் அணி தீர்மானித்துள்ளது.
அதன்படி விரைவில் விலையை குறைக்காத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக நேற்று மற்றும் இன்றுகாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.