Date:

ஜி.எஸ்.பி. பிளஸ் இழந்தால் டொலருக்கு 300 ரூபாய் வரை உயரலாம் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின் விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...