Date:

பயணக்கட்டுப்பாடு தளர்வின்றி தொடர்ந்தும் நீடிப்பு!

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரத் சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்கள் படுகொலை: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் ( காணொளி)

மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால்...

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து பெண்கள் அதிரடிக் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 கோடி...

டொலரின் இன்றைய நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(27.09.2023) அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு...