Date:

பியர் அருந்தும் சிறுவனின் காணொளி தொடர்பில் ஒருவர் கைது

சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று(11) முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...