எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29) அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 14 ரூபாவாக காணப்பட்டதோடு, தற்போது அது 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.