பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு, இலங்கை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறை உறுப்பினர்களுக்கான விருந்துபசாரம் ஒன்றினை நேற்று (28) தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு அதிகாரி திருமதி.கல்சூம் கய்சர் பதில் உயர்ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமதிடம் ஊடகத்துறை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு இந்நிகழ்வு பாகிஸ்தான் தேசத்தின் தந்தை குவாத்-இ-ஆசம் முஹம்மது அலி ஜின்னாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்துத்தெரிவித்த பதில் உயர்ஸ்தானிகர், 2021 ஆண்டில் ஊடகங்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு , எதிர்வரும் வருடங்களிலும் இது தொடர்ந்து பேணப்படும் என தான் நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்
செய்தி : நசார்